பசுமையைப் பாக்கணும்னா பச்சை பயிறு தான்!" – ஒரு விவசாயியின் குரல்

பசுமை நிறைந்த பச்சை பயிரில் அதிக லாபம் பெறுவதற்கு தஞ்சாவூர் விவசாயி பழனிசாமி கூறியது பற்றி பார்ப்போம்...!

"நம் ஊரில் நெல், சோளம், கம்பு எல்லாம் பயிர் பண்கிறோம்... ஆனால் நான் சொல்றேன் பாருங்க, இப்போ பச்சை பயிறு தான் மேலதிக மகசூலுக்கு சிறந்ததாக போட்ட பயிரு!" – அப்படின்னு தஞ்சாவூர் பக்கத்து கிராம விவசாயி பழனிசாமி சொல்ல ஆரம்பிக்கிறார். இந்த பச்சை பயிறு தான், நெற்பயிர் பின் செய்யக்கூடிய தரிசு நிலத்துல் கூட சுத்தமாக வளரக்கூடியது. ஆனால் ஒரு விஷயம், சரியான முறையில் மேலாண்மை செய்ய வேண்டும் . இல்லையென்றால் அதிக மகசூல் வராமல் நஷ்டம் ஆகிடும்!

முதலில் ஆரம்பிப்பது – நிலத்தை தயார் பண்ணணும்:

வயலை நன்கு உழுவோம். சுண்ணாம்புக்கல் 2 டன், தொழு உரம் 12.5 டன் போட்டால் மண்வளத்துக்கு ‘சக்தி ’ வரும். தென்னைநார் கழிவு போட்டாலும் நல்லது என்று கூறுகிறார் .

விதை நேர்த்தி – காயம் இல்லாமல் வளர்க்கும் மூலம்தான்!

அவர் தோட்டத்தில் பயிர்கள் நன்றாக வளர விதைகளை விதை நேர்த்தி செய்வது அவசியம் என்று சொல்கிறார். ஒரு கிலோ விதைக்கு கார்டிபடான்சிம் 2 கிராம் இல்லை என்றால்   ட்ரைகோடெர்மா 4 கிராம் போட வேண்டும். இதைச் செய்தால் நம் விதைக்கு நோய் இல்லாமல் பயிர் வளர்ந்து நல்ல மகசூல் கொடுக்கும். நெல் தரிசு நிலத்தில் பயிர் விதைத்தால், நெல் அறுவடைக்கு 5-10 நாளைக்கு முன்னாடி விதை பறிக்கணும், மண் ஈரமா இருக்கணும் அது தான் பயிர் அறுவடைக்கு சிறந்தது என்றார் !"


பாக்டீரியா கலவை – சக்தி தரும் சகாப்தம்!

பாஸ்போ பாக்டீரியா, பி.ஜி.பி.ஆர்.ஐ இவற்றை அரிசி கஞ்சியோட கலந்து விதை நேர்த்தி செய்தால் இனி பயிர் நன்றாக வளர்ந்து அதிக மகசூலை தரும்.

உர மேலாண்மை – மகசூலுக்கு ரொம்ப முக்கியம்!

மானாவாரி பயிரா இருந்தால் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கந்தகம் இதையெல்லாம் பயிர் வளர்ச்சிக்கு அவசியம். பயிர் இன்னும் நன்றாக வளர சூப்பர் சல்பேட்பயன்படுத்தலாம்.  சூப்பர் சல்பேட் இல்லையா? ஜிப்சம் பயன்படுத்தி பயிரின் வளர்ச்சியை மேம்படுத்தலாம் என்று கூறினார். அவர் சிறப்பாக நீர் மேலாண்மை பற்றி நமக்கு கூறுவது, நீர் மேலாண்மை – இங்க தான் பல பேர் தவறு செய்கிறார்கள் என்று! 

விதை போட்ட உடனே தண்ணீர். மூன்று நாட்களுக்கு பிறகு உயிர்த்தண்ணீர் கட்டணும். 10 –15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சனும். வயல் ஈரமா இருக்கணும்,நீர் தேங்காமல் இப்படி செய்தால் பயிர் செழிப்பாக வளரும் என்றார். பூக்கும், காய்பிடிக்கும் நேரம், ரொம்ப முக்கியம். அந்த நேரத்துல் தண்ணீர் ஒழுங்காக பாய்ச்சினால் விளைச்சல் நன்றாக வரும்.

இலை வழி ஊட்டச்சத்துக்கு 1% யூரியா, 2% டிஏபி, என்ஏஏ, சாலிசிலிக் அமிலம்... இதெல்லாம் 30, 45, 60 நாளில் இலை வழியா தெளித்தால், செடியில் நிறைய மொட்டு வந்து நல்ல மகசூலை கொடுக்கும்.


நெல் தரிசு பற்றி அவர் கூறுவது:

ரகங்கள் மற்றும் விதை அளவு:

1. விதைக்கும் காலம்: 

     ஜனவரி மூன்றாம் மாதம் முதல் பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை விதைக்கலாம்.

2. டை அமோனியம் பாஸ்பேட், என்ஏஏ மற்றும் சாலிசாலிக் அமிலம் தெளித்தல்:

என்ஏஏ  40 மில்லி கிராம்/ லிட்டர் மற்றும் சாலிசிலிக் அமிலம் 100 மில்லி கிராம்/ லிட்டர் பூக்கும் முன்  இலை தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15  நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை அளிக்க வேண்டும்.

 டி ஏ பி 20 கிராம்/ லிட்டர் பூக்கும் தருணத்தில்  இலை தெளிப்பாக அளிக்க வேண்டும் மற்றும் 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை அளிக்க வேண்டும்.

களை கட்டுப்பாடு – வீணாக தண்ணீரும் ஊட்டச்சத்தும் குடிக்காத வழி:

விதை போட்டதும் பெண்டிமித்தலின் இல்லையென்றால் குயிசல்பாப் தெளிக்கணும். இல்லையென்றால் 15, 30 நாட்களில் கைகளை எடுக்கணும். அப்படி செய்யாவிட்டால் களைகள் மகசூலை குறைத்துவிடும். பன்முக பூக்கும் தொழில்நுட்பம் முறை மூலம் இரண்டு முறை அறுவடை செய்யலாம். 40 - 45 நாட்களில்  முதலாம் அறுவடை. 60 - 65 நாட்களில் இரண்டாம் அறுவடை . 100 வது நாட்களில் இரண்டையும் பார்க்கலாம். 
நெற்பயிர் அறுவடைக்கு 5 - 10 நாட்களுக்குள்ளாகவே பச்சை பயிறு விதைத்திடலாம். நல்ல ஈரப்பதம் இருந்தால் கிளை கிளையா வளம். இயந்திர அறுவடைக்கு முன்பு போட்டால் இன்னும் நல்லது!"

காய்கள் 80% முதிர்ந்ததும் செடிகளை அறுத்து கட்டிப் போட்டு வெயிலில்  காயவைத்து, கைகளாலோ   இயந்திரமோ கொண்டு விளைச்சலை எடுக்கலாம். முடிவில் விவசாயி என்ன சொல்கிறார் என்றால், “ஊருக்கே பசுமை வேணும் என்றால் , நம் நிலத்தில் பச்சை பயிறு வேணும்! நவீன தொழில்நுட்பத்துடன்  பழமையான அனுபவம் சேர்ந்தால், மகசூல் நிறைய கிடைக்கும் என்று நம்புறேன் என்றார்!” நீங்களும் பச்சை பயிறு பயிரிட்டீர்கள் என்றால், உங்கள் நிலமும் வளமாகும், உங்கள் வாழ்க்கையும் வளமடையும்! என்று பசுமை நிறைந்த பச்சை பயிரில் அதிக மகசூல் காண்பது பற்றி விளக்கமாக கூறினார். 






























Previous Post Next Post

نموذج الاتصال