நவீன தொழில்நுட்ப முறை மூலம் விவசாயம் செய்வதற்கு பல எளிமையான முறைகள் உள்ளன என்று விவசாயி ஒருவர் கூறியதை பற்றி பார்ப்போம். அவை துல்லிய விவசாயம்,ஹைட்ரோபோனிக்ஸ், அக்வாபோனிக்ஸ் மற்றும் செங்குத்து விவசாயம் ஆகியவை ஆகும்.
1. துல்லிய விவசாயம் - "அறிவோடு விளையும் வயல்!"
பழைய பாட்டி வீட்டுப் பக்கத்து வயலில், கம்ப்யூட்டர் கையோடு நின்று சென்சார் காட்டும் தரவுகளை பார்த்து விதைகள் விதைக்கிறார் ரவி. அவர் பார்த்து கொண்டிருப்பது தான் துல்லிய விவசாயம் செயல்படும் முறை.
“இந்த நேரம்தான் நடவு செய்ய சரியான நேரம்!” – அவர் லேப்டாப்பில் பார்த்த தகவல் அப்படி சொல்கிறது. என்ன சொல்றிங்க இப்படி கூட விவசாயம் செய்யலாமா? என பலருக்கும் எழும்பும் கேள்வி. விவசாயி ரவியிடம் பலரும் வியப்படைந்து கேட்டனர். அதற்கு விவசாயி ரவி அட ஆமாங்க! இதற்கு பெயர் தான் துல்லிய விவசாயம். துல்லிய விவசாயமா? அப்படினா என்ன என்று கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க என்று மற்றவர்கள் கேட்க ரவி கூறியது:
துல்லிய விவசாயம் என்றால், மண்ணை, வானிலையை, தாவர வளர்ச்சியை எல்லாம் கண்காணித்து, அறிவியலுடன் விவசாயம் செய்வது. ட்ரோன் விமானம் ஆகாயத்தில் பறந்து வயலை படம் எடுக்கிறது – எந்த பகுதி நீர் குறைவாக இருக்கிறது என்று தெரிந்து செலவு குறைந்து மகசூல் அதிகரிக்க இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறினாராம்!
செயற்கைக்கோள்கள் மற்றும் ரோபோ ட்ரோன்கள், விவசாயிகளுக்கு தனிப்பட்ட தாவரங்களின் நிகழ்நேர படங்களையும் வழங்க முடியும் இதனால் அதிக நேரம் வீணாகாமல் மற்ற வேலைகளிலும் கடினம் இல்லாமல் என்னால் சுலபமாக செய்யமுடிகிறது என்று கூறினார். சரியான நேரம், சரியான இடத்தில், சரியான செயல் - இதுவே துல்லிய விவசாயத்தின் நுட்பம்!
துல்லிய விவசாயத்தின் நன்மைகள் பற்றி விவசாயி ரவி கூறுவது:
தரவு சேகரிக்கப்பட்ட பிறகு, முன்னறிவிப்பு பகுப்பாய்வு மென்பொருள் சேகரிக்கப்பட்ட தரவை பயன்படுத்தி விவசாயிகளுக்கு பயிர் சுழற்சி, உகந்த நடவு நேரங்கள், அறுவடை நேரங்கள் மற்றும் மண் மேலாண்மை பற்றிய வழிகாட்டுதலை வழங்குகிறது.
வேளாண் கட்டுப்பாட்டு மையங்கள் சென்சார் தரவு மற்றும் இமேஜின் உள்ளீட்டை மற்ற தரவுகளுடன் ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு சிகிச்சை தேவைப்படும் வயல்களை அடையாளம் காணவும், பயன்படுத்த வேண்டிய நீர், உரங்கல் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் உகந்த அளவை தீர்மானிக்கவும் இது பயன்படுகிறது.
இது விவசாயி, வளங்களை வீணாக்குவதை தவிர்க்கவும் பயன்படுகிறது. மண்ணில் உகந்த ஆரோக்கியத்திற்கான சரியான எண்ணிக்கையிலான சேர்க்கைகள் இருப்பதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் செலவுகளை குறைத்து பண்ணையின் சுற்றுச்சூழல் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
2. ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் - “நீர் இருந்தால் நிலமில்லை, ஆனால் பயிர் வளரும்!”
அதே விவசாயி ரவி என்பவர் சென்னையில் ஒரு பிளாட் வாங்கி அந்த இடத்தில் புதிதாக வீடு காட்டினார். அவர் வீட்டு கூரையில், களிமண் இல்லாமல் கொத்தமல்லியை வளர்க்கிறார். அது நன்றாக வளர்ந்தது. உடனே பக்கத்தில் குடி இருக்கும் அனைவரும் அதை பார்த்து இது எப்படி சத்தியம்? என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் கேட்டனர். அதற்கு ரவி இதற்கு பெயர் தான் ஹைட்ரோபோனிக்ஸ் பண்ணை. மண் இல்லாமல் விவசாயம் செய்து நல்ல பலன் பெற முடியும், இது எனது வீட்டு தேவைக்கும், விற்பனைக்கும் உதவுகிறது. அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் இதன் மூலம் நான் ஈட்டுகிறேன் என்று சொன்னார்.
மண் வேண்டாம், ஊட்டச்சத்து நிறைந்த நீரில் தாவரங்கள் வளர்கின்றன. பசுமை இல்லத்தில் வெப்பநிலையை கட்டுப்படுத்தி, ஒரு ஜாரிலேயே வாழ்கின்றன தக்காளி செடிகள்! என்று சொன்னதும் நவீன விவசாயத்தில் விவசாயம் செய்ய இப்படி எளிமையான முறைகள் கூட இருக்கிறதா? என்று வியப்படைந்து பார்த்தனர் அருகில் இருந்தவர்கள். நீங்களும் இனி இந்த முறையில் விவசாயம் செய்து
ஹைட்ரோபோனிக்ஸ் முறையால் விவசாயிகளுக்கு என்ன பயன்?
மண்ணற்ற விவசாயம்:
ஹைட்ரோபோனிக்ஸ் மண்ணின் தேவையை நீக்குகிறது. இது குறைந்த நிலம் அல்லது மோசமான மண் தரம் உள்ள பகுதிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
திறமையான நீர் பயன்பாடு:
நீர் ஒரு மூடிய அமைப்பில் சுழற்சி செய்யப்படுகிறது. இது ஆவியாதல் மற்றும் ஓட்டம் மூலம் நீர் வீணாவதை குறைக்கிறது.
கட்டுப்படுத்தப்பட்ட சூழல்:
ஹைட்ரோபோனிக்ஸ் அமைப்புகளை உட்புறத்திலோ அல்லது பசுமை இல்லங்களிலோ அமைக்கலாம். இது உகந்த தாவர வளர்ச்சிக்கு கட்டுப்படுத்தப்பட்ட சூழலை வழங்குகிறது.
அதிகரித்த மகசூல்:
பாரம்பரிய விவசாயத்துடன் ஒப்பிடும்போது ஹைட்ரோபோனிக் அமைப்புகளில் உள்ள தாவரங்களும் பெரும்பாலும் வேகமாக வளர்ந்து அதிக மகசூலை தருகின்றன.
பூச்சிக்கொல்லி பயன்பாடு குறைப்பு:
கட்டுப்படுத்தப்பட்ட சூழல் மற்றும் மண்ணற்ற ஹைட்ரோபோனிக்ஸ் இன் தன்மை மண்ணால் பரவும் நோய்கள் மற்றும் பூச்சிகளின் அபாயத்தை குறித்து பூச்சிக்கொல்லிகளின் தேவையை குறைக்கும்.
பல்துறை:
ஹைட்ரோபோனிக்ஸ் முறையை பயன்படுத்தி இலை கீரைகள், காய்கறிகள் மற்றும் சில பழங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களை வளர்க்கலாம்.
அரசு ஆதரவு:
தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் மற்றும் மானியங்கள் மூலம் ஹைட்ரோபோனிக்ஸ் செயல் முறையை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயம் விவசாயத்திற்கான ஒரு நவீன மற்றும் நிலையான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகை தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் உணவு உற்பத்திக்கு ஒரு நம்பிக்கைக்கு உரிய தீர்வை வழங்குகிறது என்று விவாசயி ரவி சொன்னார். இடமில்லை என்றாலும், ஈடில்லாமல் விவசாயம் செய்யலாம் என்பதற்கான சான்று – ஹைட்ரோபோனிக்ஸ்.
3.அக்வாபோனிக்ஸ் விவசாயம் - “மீனும் காய்கறியும் ஒரே வீட்டில் வாழும்!”
அதே ரவி என்பவர் விவசாயத்தில் வெற்றி பெற அடுத்தடுத்த முறையை பின்பற்றினார். அது தான் அக்வாபோனிக்ஸ் விவசாயம். அக்வாபோனிக்ஸ் விவசாயமா அப்படி என்றால் என்ன? என பலரும் சிந்திக்க கூடிய ஒன்று. ரவி வண்டலூரில் உள்ள தனது பசுமை வீட்டில், கீழே மீன்கள் நீந்த, மேலே தக்காளி செடிகள் போன்றவற்றை துலங்குகினார். இதற்கு பெயர் தான் “அக்வாபோனிக்ஸ் பண்ணை”.
மீன் கழிவுகள் தாவரங்களுக்கு உயிரூட்டும் உரமாக மாற, தாவரங்கள் மீன்களுக்கு சுத்தமான நீராக மாற்றம் தருகின்றன. இது இருமடங்கான பயிர் – நீர்ச்சிக்கனமும் இல்லாமல், நிலமும் தேவைப்படாது!
அக்வாபோனிக்ஸ் மூலம் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கிறது?
குறைக்கப்பட்ட நீர் நுகர்வு:
பாரம்பரிய விவசாயம் முறைகளுடன் ஒப்பிடும்போது அக்வா போனிக்ஸ் நீர் பயன்பாட்டை கணிசமாக குறைக்கிறது.
கழிவு குறைப்பு:
இந்த அமைப்பு மீன் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்துவதன் மூலம் கழிவுகளை குறைக்கிறது.
நிலையான உணவு உற்பத்தி:
இது மின் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கான நிலையான வழியை வணங்குகிறது. இது உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது.
ஆண்டு முழுவதும் உற்பத்தி:
அக்வா போனிக்ஸ் பல்வேறு காலநிலை மற்றும் சூழல்களில், உட்புறங்களில் கூட பயிற்சி செய்யப்படலாம். இது ஆண்டு முழுவதும் உணவு உற்பத்தியை அனுமதிக்கிறது.
அக்வா போனிக்ஸ் அமைப்புகளின் வகைகள்:
ஆழ்கடல் கலாச்சாரம் (DWC):
தாவரங்கள் மிதவைகளில் வளர்க்கப்படுகின்றன அல்லது ஊட்டச்சத்து நிறைந்த நீரின் மேல் தொங்க விடப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு தனி மீன் தொட்டியுடன் பயன்படுத்தப்படுகிறது.
மீடியா படுக்கைகள்:
திட ஊடகத்தால் ( சரளை அல்லது சரளை அல்லது களிமண் கூலாங்கற்கள் போன்றவை) நிரப்பப்பட்ட ஒரு படுக்கையில் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த நீர் சுழற்சி செய்யப்படுகிறது.
ஊட்டச்சத்து படல நுட்பம்:
ஊட்டச்சத்து நிறைந்த நீரின் மெல்லிய படலம் ஒரு ஆழமற்ற கால்வாயில் தாவர வேர்கள் மீது பாய்கிறது.
அக்வாபோனிக்ஸ் மூலம் விவசாயம் செய்யும் பொதுவான பயிர்கள்:
கீரை, துளசி, தக்காளி, வெள்ளரிகள் மற்றும் மிளகுத்தூள் ஆகியவை அமைப்புகளுக்கு ஒரு பிரபலமான தேர்வாக உள்ளது.
4.செங்குத்து விவசாயம் - “அடுக்குகளால் அடுக்குமேல் விளைச்சல்!”
ஒரே கட்டிடத்தில், 5 மாடிகளில் வெவ்வேறு காய்கறிகள்! ஒரு பக்கம் விவசாயி ரவி நவீன முறைகளை பின்பற்றி விவசாயம் செய்தாலும், அவரது மனைவியும் நவீன விவசாயத்தில் மிக ஆர்வமுடன் செங்குத்து விவசாயத்தை செய்கிறார். சென்னை புறநகரில், வசிக்கும் ரவியின் மனைவி ஒரு பெண் வங்கி ஊழியர். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தினால் அவரும் செங்குத்தாக விளையும் பசுமையை தன் வீட்டில் வளர்த்து கொண்டிருக்கிறார்.
செங்குத்து விவசாயம் – சிறிய இடத்தில், பல அடுக்குகளில், அதிக பயிர். தண்ணீர் குறைவாகச் செல்கிறது, பூச்சிக்கொல்லி தேவையில்லை, நகரத்திலேயே உணவு உற்பத்தி என்று கூறினார்கள்!
செங்குத்து விவசாயத்தின் பயன்கள்:
குறைந்த நில பயன்பாடு:
விவசாயம் நிலத்தின் பயன்பாட்டை குறைக்கிறது. இது சிறிய இடத்தில் அதிக அளவு பயிர்களை வளர்க்க உதவுகிறது.நீர் பயன்பாடு:
இந்த முறையில், நீர் பாசனம் மிகவும் திறமையாக செய்யப்படுகிறது. இதனால், நீரின் பயன்பாடு வெகுவாக குறைகிறது.
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைவு:
செங்குத்து விவசாயத்தில், பயிர்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்படுவதால், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தேவை குறைக்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பை உறுதி செய்தல்:
செங்குத்து விவசாயம் உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. குறிப்பாக நகரங்களில் உணவுப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.
உள்ளூர் உணவு உற்பத்தி:
நகரங்களில் உள்ளூர் உணவு உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதனால், உணவு பொருட்களை நீண்ட தூரம் கொண்டு செல்லும் செலவு மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் குறைகின்றன.
பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றது:
செங்குத்து விவசாயம், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள உதவுகிறது. காலநிலை மாறுபாடுகள் காரணமாக ஏற்படும் விவசாய இடர்பாடுகளை குறைக்கிறது.
உற்பத்தி திறன் அதிகரிப்பு:
செங்குத்து விவசாயத்தில், உற்பத்தி திறன் வழக்கமான விவசாய முறைகளை விட அதிகமாக இருக்கும்.
வேலைவாய்ப்பு உருவாக்கம்:
இந்த விவசாய முறை, மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, குறிப்பாக, இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றனர்.
செங்குத்து விவசாயம், விவசாயத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்கால உணவு பாதுகாப்பை உறுதி செய்யும். இந்த எளிமையான முறைகள் மூலம் தங்களுக்கு அதிக லாபமும் கிடைக்கிறது என்று கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பசுமை ஊசலாடும் உயரத்தில் – நவீன நகரங்களின் விவசாயக் கனவுக்கு சிறந்த வழி!