பண்ணையத்தில் பன்முகத்தன்மை - உழவர்களுக்கு புதிய வெற்றியின் துவக்கம்!

விவசாயத்தில் ஒரு பயிரை மட்டும் பயிரிடாமல் பல பயிர்கள் அல்லது பண்ணையத் தொழிலை செய்து வந்தனர் நம் முன்னோர்கள்! அதே போல் அந்த பகுதிகளில் விளையும் பொதுவான காய்கறிகளைப் பயிரிட்டு நல்ல லாபத்தையும் சம்பாதித்து வந்தனர். நம் முன்னோர்களின் விவசாயத்தை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஒரு விவசாயி நிச்சயமாக மாடுகள், ஆடுகள், கோழிகள், புறாக்கள் மற்றும் வாத்துகள் போன்ற பலவற்றையும் வைத்திருந்தது நமக்கு தெரியும். நிலத்தில் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், நெல், வயலைச் சுற்றிலும் அல்லது வரப்பின் ஓரங்களிலும் தென்னை மற்றும் பனை மரங்களை அதிகமாக நட்டு வைத்திருப்பர்.இப்படி பல பயிர்களையும் கால்நடைகளையும் வளர்த்து விவசாயத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இதை எல்லாம் பின்பற்றி விவசாயத்தை கவலைஇன்றி கடந்து வந்தனர். அவர்கள் பின்பற்றிய முறைக்குப் பெயர்தான் “ஒருங்கிணைந்த பண்ணையம்”.

ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கிய வகைகள்:

  • பயிர் - கால்நடை ஒருங்கிணைந்த  பண்ணை 
  • பயிர் - மீன் ஒருங்கிணைந்த பண்ணை 
  • பயிர் - கோழி ஒருங்கிணைந்த பண்ணை 
  • பயிர் - கால்நடை - மீன் ஒருங்கிணைந்த பண்ணை 
  • பயிர் - கால்நடை - கோழி ஒருங்கிணைந்த பண்ணை 
  • பயிர் - தேனீ ஒருங்கிணைந்த பண்ணை 

ஒருங்கிணைந்த வேளாண்மையில் என்னென்ன செய்யலாம்?

"ஒருங்கிணைந்த வேளாண்மை என்பது ஒரே நிலத்தில் பல்வேறு வருமான வாய்ப்புகளை உருவாக்கும் புதுமையான வழி!" இது இயற்கையை பாதுகாக்கும், செலவை குறைக்கும், உற்பத்தியை அதிகரிக்கும் நவீன தொழில் சார்ந்த விவசாயம். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பல தொழில் முறைகள் இருக்கிறது. அவை என்ன என்று பார்ப்போம்!

முதன்மை பயிர் சாகுபடி - நெல், கோதுமை, காய்கறிகள் 

மீன் வளம் மற்றும் பண்ணை வளர்ப்பு - கோழி, ஆடு, மாடு, செம்மறி ஆடு, மீன் 

மரங்கள் மற்றும் கிழங்குகள் - பழமரம், மரக்கன்று, வேர்கிழங்கு 

உழவு தொழில் நுட்பங்கள் - உரமூட்டும் சாணம், பசும்பூண்டு உரம் 

மிக்ரோ பசுமை சாகுபடி - பசுமை தாவரம் , மரம் வளர்ப்பு 

மீள்சுழற்சி அடிப்படையிலான கழிவுகள் பயன் - கால்நடைகளின் சாணம் உரமாக பயன்படுகிறது.

பன்முக வேளாண்மையில் இவை அனைத்தும் அடங்கும். இது மட்டும் இல்லாமல் விவசாயிகளின் உற்பத்தி செலவை குறைக்க இன்னும் பல முறைகள் இருக்குங்க...!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மீன் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். அதற்குச் சுமார் 10 சென்ட் நிலம் இருந்தாலே போதுமானது. மீன் குட்டையின் ஓரத்தில் கோழிக்கூண்டை அமைக்கலாம். கோழியின் கழிவு மீன்களுக்கு ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது. கோழியின் கழிவுகளில் 22 சதவிகிதம் புரத சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், தாமிரம், மாங்கனீஸ் போன்ற உலோகச் சத்துக்களும் 15 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால், மீன் வளர்ச்சிக்கு உதவும். கோழிகளை 8 வது வாரத்தில் விற்பனை செய்யலாம். மீன்களை 7 வது மாதத்தில் கடைசியில் விற்பனை செய்யலாம்.

பயிர்களின் கழுவுகளை ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் போடலாம். இது போக ஆடு, மாடுகளின் கழிவுகளையும் தீவன மீதத்தையும் பயிருக்கு உரமாகப் போடலாம். இதுதவிர, மாட்டுச் சாணத்திலிருந்து வீட்டுக்குத் தேவையான எரிவாயுக்களை உற்பத்தி செய்து கொள்ளலாம்.எரிவாயு உற்பத்தி செய்தது போக மீதமுள்ள மாட்டு சாணத்தை வைத்து மண்புழு உரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எனப் பயிருக்கு நன்மை தரும் இடுபொருள்ககைத் தயார் செய்து கொள்ளலாம்.இப்போது வீட்டுக்கு எரிவாயுவும் கிடைக்கிறது, பயிர் வளர்ச்சிக்கான உரமும் கிடைக்கிறது. இது போக மண்புழுக்கள் அதிகமானால் அதை மீன்களுக்கு உணவாகவும் கொடுக்கலாம். மேலும் தன்னுடைய தோட்டத்தில் இருக்கும் செடிகளை வைத்தே பயிர்களுக்கான பூச்சி விரட்டிகளைத் தயார் செய்து கொள்ளலாம். 

இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை, பயிருக்கு வரும் பூச்சிகள் தாக்குவதற்கு முன்னரே செயல்படுவது சிறந்தது. மரப் பயிர்களுக்கு ஊடுபயிராக வாழை, மஞ்சள், மா, சப்போட்டா, காய்கறிகள் எனப் பலவற்றையும் பயிர் செய்யலாம்.

முதன்மை பயிர் அடங்கிய ஒருங்கிணைந்த வேளாண்மை!

முதன்மை பயிர் அடங்கிய ஒருங்கிணைந்த வேளாண்மை என்பது விவசாயத்தில் தாராள வருமானம் மற்றும் நிலைத்த வளர்ச்சியை நோக்கமாக கொண்ட நவீன முறையாகும். இதில் நெல், கோதுமை, சோளம், பருத்தி போன்ற முதன்மை பயிர்களை மையமாக வைத்து, அதனுடன் கால்நடை, மீன் வளர்ப்பு, காய்கறி மற்றும் பழங்கள் போன்ற துணை உற்பத்திகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது ஒரு நிலத்தில் பலதரப்பட்ட உற்பத்தியை சாத்தியமாக்கி, விவசாய வருமானத்தை அதிகரிக்கிறது. மண்ணின் உற்பத்தி திறனை மேம்படுத்தி, இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த உதவுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த முறையில் பசுமை தொழில்நுட்பங்களும் இணைக்கப்படுவதால், இது ஒரு நிலைத்த மற்றும் இலாபகரமான வேளாண்மை தீர்வாக விளங்குகிறது.


ஒருங்கினைந்த வேளாண்மை முறையில் பயிரிடும் முதன்மை பயிர்கள்:

ஒருங்கினைந்த வேளாண்மை முறையில் முதன்மை பயிர்களை பயிர்களை பயிரிட்டு அறுவடை செய்வது புத்திசாலிதனமான நடைமுறை. ஒரே நிலத்தில் பல பயிர்களை இணைத்து சாகுபடி செய்வதன் மூலம் நில வளமும் உயரும், பூச்சி நோய் தாக்கமும் குறையும், விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானமும் கிடைக்கும். இப்போது நெல், பருத்தி, காய்கறி, பழம் மற்றும் கிழங்கு வகைகள் பற்றி பார்க்கலாம்.

நெல் பயிர் - நம் வாழ்வின் அடிப்படை உணவாகிய நெல், ஒருங்கிணைந்த வேளாண்மையில் முக்கிய இடம் பெறுகிறது. நெல் சாகுபடிக்குள் பசலைக்கீரை, கீரை வகைகள் அல்லது பருப்பு வகைகளை சேர்த்து பயிரிட்டால், நில வளம் மேம்படும். மேலும் நெல் அறுவடை செய்யும் காலத்தில் கூட, கீரை மற்றும் சிறு பயிர்களிலிருந்து அடிக்கடி வருமானம் கிடைக்கும். இது விவசாயியின் வாழ்க்கையை நிலைப்படுத்தும்.

பருத்தி - பருத்தி நம் நாட்டின் முக்கிய தொழில் பயிர். இதனை ஒருங்கிணைந்த முறையில் பயிரிடும் போது, அதனுடன் பச்சைப்பயறு அல்லது கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்து சாகுபடி செய்தால், நிலத்தில் நைட்ரஜன் இயற்கையாக அதிகரிக்கும். இதனால் பருத்தி நல்ல தரத்திலும் அதிக மகசூலிலும் கிடைக்கும். மேலும், பருத்தியிலிருந்து கிடைக்கும் வருமானத்துடன், பருப்பு வகைகளும் கூடுதல் லாபத்தை தரும்.

காய்கறிகள் - காய்கறிகள் என்பது வேகமாக விளையும் பயிர்கள். தக்காளி, பீர்க்கங்காய், முருங்கை, மிளகாய் போன்ற காய்கறிகளை, முக்கிய பயிர்களின் இடைவெளிகளில் பயிரிட்டால் நிலம் எப்போதும் பசுமையாக இருக்கும். இந்த பயிர்கள் குறுகிய காலத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் விவசாயிக்கு அடிக்கடி பண வருகை கிடைக்கும். மேலும், காய்கறிகள் மனிதர்களின் அன்றாட உணவுக்குத் தேவையான சத்துக்களையும் வழங்குகின்றன.

பழ மரங்கள் - மாம்பழம், வாழை, மாதுளை, பேரீச்சம் போன்ற பழ மரங்களை வயலின் ஓரங்களில் நட்டு வைத்தால், ஆண்டுதோறும் நிலையான வருமானம் கிடைக்கும். இம்மரங்கள் நிழல் அளிப்பதால், வயலில் பயிரிடப்பட்ட பிற செடிகளும் சிறப்பாக வளரும். மேலும் பழங்களின் சந்தை விலை எப்போதும் உயர்வாக இருப்பதால் விவசாயி அதிகம் லாபம் காண முடியும்.

கிழங்கு வகைகள் - சேனைக்கிழன்கு, உருளைக்கிழங்கு போன்றவை நிலத்துக்குள் வளரும் பயிர்கள். இவை நிலத்தை உரமாக்குவதோடு குடும்பத்திற்கும் சந்தைக்கும் உணவு பாதுகாப்பை வழங்குகின்றன. கிழங்கு வகைகள் நீண்ட காலம் சேமித்து வைக்கக் கூடிய தன்மை கொண்டதால், வவசாயிக்கு தேவையான போது விற்று லாபம் பெற முடியும்.

இவ்வாறு நெல், பருத்தி, காய்கறி, பழ மரங்கள், கிழங்கு வகைகள் என பல பயிர்களை ஒரே நிலத்தில் சேர்த்து பயிரிடும் ஒருங்கிணைந்த வேளாண்மை விவசாயிக்கு ஆண்டு முழுவதும் நிலையான வருமானத்தையும், நிலத்தின் வளத்தையும், உணவுப் பாதுகாப்பையும் அளிக்கிறது.


இரண்டாம் நிலை பயிரின் ஒருங்கிணைந்த வேளாண்மை! 

இரண்டாம் நிலை பயிர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த வேளாண்மை என்பது விவசாய நிலத்தில் முழு திறனுடன் உற்பத்தி செய்யும் ஒரு நவீன மற்றும் நன்மை தரும் முறையாகும். முதன்மை பயிர்களுடன் சேர்த்து முருங்கை, பசலைக்கீரை, தக்காளி, பீர்க்கங்காய், திணை, சாமை, சிறுதானியங்கள் போன்ற இரண்டாம் நிலை பயிர் சாகுபடி செய்யப்படுகின்றன. இது ஒரு நிலத்தில் ஒரே நேரத்தில் பல்வகை உற்பத்திகளை பெறச் செய்கிறது. மண்ணின் உரத்தன்மை மேம்படுகிறது, பூச்சி நோய்கள் குறைகின்றன, நீர் மற்றும் உரத்தின் பயன்பாடு சிக்கனமாக அமைகிறது. இரண்டாம் நிலை பயிர்கள் இடைவெளி காலங்களை நிரப்பி, மேலதிக வருமானம் வழங்குகின்றன. இது விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பையும், சுற்றுச்சூழலுக்கு சிறந்த நிலைத்த வேளாண்மையையும் ஏற்படுத்தும் சிறந்த பயிர் ஒருங்கிணைப்பு முறையாகும்!

நஞ்சை நிலத்து ஒருங்கிணைந்த பண்ணை திட்டம்:

நஞ்சை நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் என்பது இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்தி வருமானத்தை பலமடங்காக உயர்த்தும் நவீன முறையாகும். இத்திட்டத்தில் நஞ்சை நிலத்தின் ஈர்ப்பத்தைச் சீராகப் பயன்படுத்தி பயிர் சாகுபடி, மீன் வளர்ப்பு, மாட்டுப் பண்ணை, கோழி வளர்ப்பு போன்றவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைங்கப்படுகின்றன. இது ஒரே நேரத்தில் பலவகை உற்பத்தியை வழங்கி நிலத்தின் பயன்களை அதிகரிக்கிறது. மாறும் காலநிலை, சந்தை மாற்றங்கள் போன்றவை இத்திட்டத்தில் பாதிப்பு அளிக்காமல், நிலையான வருமானம் கிடைக்க உதவுகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்கு விக்கும் இந்த முறை, நிலத்தையும், விவசாயியையும் பாதுகாக்கும் பசுமை முயற்சியாக திகழ்கிறது. நஞ்சை நிலத்திற்கு ஏற்ப இப்படியான ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் சிறந்த தீர்வாகும்!


புஞ்சை நிலத்து ஒருங்கிணைந்த பண்ணை திட்டம்:

புஞ்சை நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் என்பது குறைந்த நீர் வளத்திலும் அதிக மகசூல் பெறும் நவீன முறையாகும். இத்திட்டத்தில் நுண்ணறிவு பண்ணை, வறண்ட நிலத்திற்கு ஏற்ப பயிர்கள், காடை மற்றும் கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காய்கறி மற்றும் பழ சாகுபடி ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இது புஞ்சை நிலத்தின் பயனுள்ள வருமான மூலமாக மாற்றுகிறது. மாறும் காலநிலைக்கும், நீர்நிலை குறைபாடுகளுக்கும் எதிராக நிலையான வருமானத்தை உறுதி செய்யும் இத்திட்டம், விவசாயத்தில் ஒரு புது திசையை ஏற்படுத்துகிறது. பசுமை வளர்ச்சிக்கான விரைவான பாதையாக புஞ்சை நில ஒருங்கிணைந்த பண்ணை விளங்குகிறது.

ஒருங்கிணைந்த வேளான்மை முறையை பயன்படுத்துவது ஏன் மிக அவசியம்?

இப்பொழுது விவசாயத்தில் நிலையான வருமானம் கிடைக்கணும், மண் தரம் நல்லா இருக்கணும், தண்ணீர் தேவையானதாக இருக்கணும், சந்தை பிரச்சனை வந்தால் கவலை இல்லாமல் இருக்கணுமா? அதற்க்கு ஒரே வழி தான் - ஒருங்கிணைந்த பண்ணை முறை! இந்த முறையில் நம் நிலத்திலேயே பயிர், மாடு, கோழி, மீன், தேனீ எல்லாத்தையுமே சேர்த்து வளர்க்க முடியும். இதில் ஒன்று வீணாக போனால், இன்னொன்று கைகொடுக்கும். மண்ணும் ஆரோக்கியமாக இருக்கும், கழிவுகளும் நமக்கு நன்மை தரும். ஒரே நேரத்தில் நிரைய வருமானம் வரும், குடும்பம் நிம்மதியாக வாழ முடியும். மழை வராத சமயத்தில் கூட சிக்கனமான வசதியுடன் பயிரிடலாம். இப்படி பலதரப்பட்ட நன்மைகள் தரும் இந்த முறை, என்றைக்கும் விவசாயிகளுக்கு மிக அவசியமானதாக உள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணை மூலம் தீவன உற்பத்தி - எளிமையாக மற்றும் பயனுள்ளதாக!

ஒருங்கிணைந்த பண்ணை முறை, பண்ணையிலேயே கால்நடைகளுக்கு தேவையான உணவுகளைத் தயாரித்து பயன்படுத்தும் அறிவார்ந்த வழியாகும். இதனால் வெளியே இருந்து தீவனம் வாங்கும் செலவு குறைகிறது. மேலும் உங்கள் பண்ணைத் தனிநிறைவு பெற்றதாய் மாறுகிறது!

எப்படி உற்பத்தி செய்வது?

1. பசுமை தீவனங்கள் - நப்பியார், சீம்பா, லூசர்ன் போன்ற பசுமை களைகளை வளர்த்தல், கால்நடைகளுக்கு சத்தான உணவாக பயன்படும்.

2. தானியக் கழிவுகள் - நெல், கோதுமை, சோளத்தின் மீதமுள்ள பொருளை வீணாக்காமல் தீவனமாக மாற்றலாம்.

3. மீன்களுக்கு - பாசிப்பயிர்கள், கொழும்பு ( கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட்கள்) போன்றவை சிறந்த தீவனங்கள்.

4. கோழிகளுக்காக - சோளம், கீரைகள், காய்கறி கழிவுகள் சுறுசுறுப்பான வளர்ச்சிக்கு உதவும்.


ஒருங்கிணைந்த வேளாண்மையின் நன்மைகள்:

  • அதிக வருமானம் - பசுமை வழியிலே பல துறைகள் ஒருங்கிணைந்து ஆண்டு முழுவதும் லாபம் தரும்.
  • கழிவுகள் வீணாகாது - பண்ணையில் உள்ள அனைத்தையும் மறுசுழற்சி செய்து உரம், எரிபொருள் போன்றவையாக மாற்ற முடியும்.
  • மண் வளம் மேம்படும் - இயற்கை உரங்கள் மூலம் மண் புத்துணர்வு பெறுகிறது.
  • சுற்றுச் சூழல் பாதுகாப்பு - ரசாயனங்கள் குறைந்து இயற்கை நிலை பாதுகாக்கப்படுகிறது.
  • வேலை வாய்ப்பு - கிராமப்புற மக்களுக்கு பலவகை வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.
  • உணவு பாதுகாப்பு - பலவகை உணவு பொருட்கள் ஒரே இடத்தில் உற்பத்தியாகின்றன.
  • நிலையான விவசாயம் - இயற்கையை காக்கும் பயிர்கள் இந்த முறையில் நிலையாகின்றன.
  • சூழலுக்கு நட்பு - இயற்கையின் பக்கமாக நின்று, பசுமை வாழ்வை உருவாக்கும் வழி இது! 
  • சாண எரிவாயு போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களை பயன்படுத்துவதன் மூலம், விவசாயத்தின் செலவுகளை குறைக்கலாம்.

ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை செயல்படுத்தும் வழிமுறைகள்:

1. நிலைமையறிதல்:

முதலில் பண்ணை நிலத்தின் தன்மை, நீர் ஆதாரம், மண் தரம், காலநிலை ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்வது முக்கியம். இது எங்கு, என்ன வகை ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் செய்யலாம் என்பதை தீர்மானிக்க உதவும்.

2.பண்ணை கூறுகள் தேர்வு:

பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, தோட்டக்கலை, மண்புழு உரம் தயாரித்தல் ஆகியவற்றில் நிலத்திருக்கும், வாய்ப்பிற்கும் ஏற்ப சிறந்தவை தேர்வு செய்ய வேண்டும்.

3.ஒத்துழைக்கும் அமைப்பு:

ஒவ்வொரு கூறும் மற்ற கூறுகளுடன் தொடர்பாக இயங்க வேண்டும். உதாரணமாக, கால்நடை கழிவுகள் மண்புழு உரத்துக்கு பயன்படுத்தலாம். மீன் வளர்ப்பிலிருந்து கிடைக்கும் தண்ணீர் தோட்டத்துக்கு பயன்படலாம்.

4. நீர் மேலாண்மை திட்டம்:

சாளை அமைத்தல், டிரிப் பாசனம், மழை நீர் சேமிப்பு ஆகியவையும் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

5. இயற்கை வளங்களை பேணல்:

இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உழவு முறைகள் ஆகியவற்றை அதிகரிக்க ரசாயன பயன்பாட்டை குறைக்க திட்டமிட வேண்டும்.

6.வேலை பகிர்வு மற்றும் பயிற்சி:

பண்ணை நிர்வாகம், தொழில் நுட்பங்கள் குறித்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பணி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.

7. சந்தை நிலை ஆய்வு மற்றும் விற்பனைத் திட்டம்:

உற்பத்திகளை சந்தையோடு பொருந்தும்படி திட்டமிட்டு, நேரடி விற்பனை, விவசாய கூட்டுறவு போன்ற வழிகளில் லாபம் பெற முயற்சி செய்ய வேண்டும்.

ஒருங்கினைந்த வேளாண்மை முறையில் மஞ்சள் பயிரிடுதல்!

மஞ்சள் என்பது நம் பாரம்பரிய சுவையையும், ஆரோக்கியத்தையும் குறிக்கும் பயிர். இதை ஒருங்கினைந்த வேளாண்மை முறையில் பிற பயிர்களுடன் சேர்த்து வளர்ப்பது விவசாயிகளுக்கு இரட்டிப்பு நன்மை தரும். மஞ்சள் அதிக சத்து நிறைந்த நிலத்தில் நன்றாக வளரும். அதனால் இதை கிழங்கு வகைகள் ( சேனை, கருணை), காய்கறிகள் அல்லது பருப்பு வகைகளுடன் சேர்த்து வளர்த்தால் நிலத்தின் வளம் குறையாமல், மண்ணில் உள்ள சத்துகள் சரியாகப் பகிர்ந்து கொள்ளப்படும்.

மஞ்சள் செடிகள் நிழலை விரும்பும் தன்மை கொண்டவை. அதனால் இடைப்பட்ட இடங்களில் வளர்க்கப்படும் பிற பயிர்கள் நிலத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக் கொண்டு, மஞ்சள் செடிகளின் வளர்ச்சிக்கு கூடுதல் ஆதரவாக இருக்கும். இவ்வாறு இரண்டு பயிர்களும் ஒன்றுக்கொன்று துணையாக இருந்து, விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் தருகின்றன.

சந்தை மதிப்பு எப்போதும் நிலையானதாய் இருப்பது மஞ்சளின் மிகப்பெரிய பலன். வருடம் முழுவதும் மஞ்சளுக்கு தேவை அதிகம். அதேசமயம் இணைத்து வளர்க்கப்படும் கிழங்கு அல்லது காய்கறிகளும் சந்தையில் எளிதில் விற்பனையாகி உடனடி வருமானத்தை அளிக்கும். இதனால் விவசாயிகள் ஒரே நிலத்தில் இரண்டு பயிர்களில் இருந்தும் உறுதியான லாபத்தை பெற முடிகிறது.

குறைந்த செலவில், அதிக மகசூல் தரும் ஒருங்கினைந்த வேளாண்மை முறையில் மஞ்சள் சாகுபடி செய்வது, விவசாயிகளுக்கு நிலையான வருமானத்தையும், நில வளத்தையும் பாதுகாக்கும் சிறந்த தேர்வாகும்.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை!

விவசாயத்தில் நவீன முன்னேற்றங்கையும், இயற்கையோடு கூடிய நல வாழ்வையும் ஒருங்கிணைக்கும் சிறப்பான முயற்சியாக தமிழ்நாடு அரசு "ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தை" அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் விவசாயிகளுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கின்றன.

சிறப்புகள்:

1. வருமானம் பலமடங்கு!

பயிர், கால்நடை, மீன், கோழி, தேனீ, தோட்டக்கலை போன்றவை ஒரே பண்ணையில் இணைந்து ஆண்டு முழுவதும் லாபம் தருகின்றன.

2. கழிவுகள் வீணாகாமல் பணி செய்யும்!

பண்ணையில் கிடைக்கும் கழிவுகள் உரமாகவும், எரிபொருளாகவும் மாறி செலவைக் குறைத்து லாபத்தை உயர்த்துகின்றன.

3.வேலை வாய்ப்புகள் உருவாகின்றன!

பல்வேறு கூறுகள் செயல்படுவதால், கிராமங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது.

4.இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன!

மழைநீர் சேமிப்பு, மரக்கம்பங்கள், இயற்கை உரங்கள் ஆகியவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.

5. மண் -  நீர் நலனுடன் வளர்கின்றன!

மண்புழு உரம் மற்றும் இயற்கை முறைகள் மூலம் நிலம் சீராகவும், நீர் வளம் பாதுகாக்கப்பட்டும் இருக்கும்.

6.பயிற்சி மற்றும் நிதியுதவி!

விவசாயிகள் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு அனுபவிக்க முறைகளை கற்று கொள்கிறார்கள். திட்டங்களுக்கு அரசின் நிதியுதவியும் கிடைக்கிறது.

7. பசுமை வளர்ச்சிக்கு ஊக்கம்!

சூழல் நட்பு நடவடிக்கைகள் மூலம் நிலையான, பசுமையான விவசாய வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.

8.கூடுதல் வருமானத்திற்கு வாய்ப்பு!

மாவு தயாரித்தல், ஜாம், அச்சாறு போன்ற பயனுள்ள பொருட்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.


தமிழ்நாட்டில் செயல்படுத்தும் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டங்கள்:

  • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்
  • தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் 
  • ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் 
  • மானாவாரி பகுதி மேம்பாடு 
இந்த முயற்சிகள், விவசாயிகளை சுயநம்பிக்கையுடன் லாபகரணமான விவசாய நோக்கில் பயணிக்கச் செய்கின்றன!















Previous Post Next Post

نموذج الاتصال