நவீன வேளாண்மையில் அதிக விளைச்சல் தரும் நெல் சாகுபடி!

நம்  அன்றாட வாழ்க்கையில் உயிர் வாழ்வதற்கு முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளும் பயிர்தான்  நெல் பயிர். நம் வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தும் உணவு முறைகளில் முதலிடத்தில் இருப்பது நெல் தாங்க. நம் விவசாயிகள் நெற்பயிரை அவர்களின் வயல்களில் விளைத்து அது மூலம் கிடைக்கக்கூடிய அரிசியை தான் நாம் சமைத்து உணவாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இப்பொழுது இருக்கிற காலகட்டத்தில் நமக்கு சரியா மழையும் பெய்வது இல்லை, அது மட்டும் இல்லாமல்  நெல் பயிர்கள் பூச்சிகளால்  தாக்கப்பட்டு நோய்வாய்பட்டு அதிக விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் ரொம்ப கஷ்டத்துக்கு ஆளாகிடுறாங்க. இப்பொழுது இருக்கிற மக்கள் தொகை காரணமாக அதிக விளைச்சல் சரியான முறையிலும், எளிதான வகையிலும் விவசாயம்  செய்தால் மட்டுமே இதை ஈடுகட்ட முடியும் விவசாயிகளுக்கு அதிக லாபமும் வரும். சரி இந்த  நெல்ப்பயிர்கள் பூச்சிகளில் இருந்து நோய்வாய்ப்படுவதை எப்படி தடுக்கலாம் மற்றும் விளைச்சலை எளிதான முறையில் எப்படி அதிகப்படுத்தலாம். இதையெல்லாம் சரி செய்யத்தான் இப்போ நவீன வேளாண்மை முறை வந்திருக்கு. இனி விவசாயிகளுக்கு கவலையே வேண்டாம்! நெற்பயிர்களை நவீன முறையில் எப்படி விளைத்து விவசாயம் செய்வது,அதிக மகசூல் பெறுவது மற்றும் அதிக லாபம் பெறுவது  என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க…

நவீன வேளாண்மை முறையில் அதிக விளைச்சல் தரும் நெல் சாகுபடிக்கு, அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள், சரியான   உழவியல் தொழில்நுட்பங்கள்  மற்றும் உரம் மேலாண்மையை பின்பற்றுவது அவசியம். இதையெல்லாம் விவசாயிகளான நீங்கள் சரியா செய்தாலே போதும். சரி முதல்ல நெற்பயிர்களோட விளைச்சலை எப்படி அதிகப்படுத்தலாம் அதற்கு என்னென்ன வழிகள் இருக்குன்னு பார்ப்போம்.

விளைச்சலை அதிகரிக்க என்னென்ன வழிகள் இருக்குனு தெரிஞ்சிக்கலாம்!

உயர் விளைச்சல் ரகங்கள்:

அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக,  ஐ.ஆர்.20, கோ (Co),பாஸ்மதி,PR 121,PR 126, ADT 38, IR 20  மற்றும் வெள்ளை பொன்னி இது போன்ற  ரகங்கள் நல்ல விளைச்சலை தரக்கூடியவை.

சரியான விதை நேர்த்தி:

விதைப்பதற்கு முன், விதைகளை பூஞ்சை நாசினிகள் கொண்டு விதை நேர்த்தி செய்வது பயிர்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

உரமிடுதல்:

பயிர்களுக்கு தேவையான அளவு உரங்களை சரியான நேரத்தில் இடவேண்டும். குறிப்பாக  தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து அவசியம்.

களை கட்டுப்பாடு:

களைகள் நெற்பயிர்களுடன் சேர்ந்து உணவு மற்றும் நீரை உறிஞ்சுவதை தடுக்க, களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.

நீர் மேலாண்மை:

பயிருக்கு தேவையான அளவு நீர் பாய்ச்சுவது அவசியம். நீர்ப்பாசனம் முறையாக இருந்தால் பயிர்கள் நன்கு வளரும்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை:

பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க, முறையான மேலாண்மை முறைகளை பின்பற்ற வேண்டும்.

களைக்கொல்லிகள்:

களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லிகளை பயன்படுத்தலாம். ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அறுவடை:

சரியான நேரத்தில் அறுவடை செய்வது  விளைச்சலை அதிகரிக்க உதவும்.

பாரம்பரிய நெல் ரகங்கள்:

அதிக விளைச்சல் தரும் பாரம்பரிய நெல் ரகங்களையும் நவீன தொழில்நுட்பங்களுடன் சாகுபடி செய்யலாம்.

சரி, இதெல்லாம் நமக்கு தெரியும், தெரியாதவங்களும் தெரிஞ்சுக்கங்க… இதெல்லாம் இருக்கட்டும் நவீன வேளாண்மை தொழில்நுட்பம்  மூலம் எளிதான  முறையில் அதிக விளைச்சலை பார்க்கலாம் அப்படின்னு சொன்னீங்க. நவீன வேளாண்மை தொழில்நுட்பம் என்றால் என்ன? இதன் மூலம் அதிக விளைச்சலை எப்படி பெற முடியும் என்று தானே கேட்கிறீங்க.. அடுத்து  அதை தான் பார்க்க போறோம் வாங்க.

நவீன தொழில்நுட்பங்கள்எப்படி நமக்கு பயன்படுகிறது?

நவீன தொழில்நுட்பங்கள் என்பது இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிப்பது, வளங்களை சேமிப்பது மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை குறிக்கிறது. இதற்காக நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இப்போ நிறைய கருவிகள் வந்திருக்கு. இந்த கருவிகள் விவசாயத்தில் எப்படி  பயன்படுகிறது என்று பார்ப்போம்.

களை எடுக்கும்  இயந்திரங்கள்:

களையெடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம், களை எடுக்கும் வேலையை எளிதாக செய்யலாம்.

உரமிடும் கருவிகள்:

உரமிடும் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம், உரங்களை சரியான அளவில் இடலாம்.


நீர் தெளிக்கும் கருவிகள்:

நீர் தெளிக்கும் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம், பயிர்களுக்கு நீரை சீராக பாய்ச்சலாம்.


இத்தகைய நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயத்திற்கு என்று கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்தினால் எளிதான முறையில் அதிக விளைச்சலை காணலாம்.

நெல் சாகுபடியில் விவசாயிகளின் பங்கு என்னென்னு தெரிஞ்சிக்கலாமா?

சரி இதெல்லாம் தெரிந்தால் மட்டும் போதுமா?அதை செயல்படுத்துவது மிக முக்கியமானது. இதில் விவசாயிகளின் பங்கு தான் ரொம்ப முக்கியம். நவீன தொழில்நுட்ப  முறையில் விவசாயிகளின் பங்கு எப்படி பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

விவசாயிகளின் பயிற்சி:

நவீன வேளாண்மை பற்றிய பயிற்சிகளில் கலந்து கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது அவசியம்.

விவசாயிகளின் அனுபவ பகிர்வு:

நமக்கு மட்டும் தெரிஞ்சா போதாது நமக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கும் பகிர வேண்டும்.மற்ற விவசாயிகளுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம், புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

விவசாய சங்கங்களில் பங்களிப்பு:

விவசாயிகள் சங்கங்களில் இணைந்து செயல்படுவதன் மூலம், தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம்.

சரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நவீன வேளாண்மை முறைகளை பின்பற்றி நெல் சாகுபடி செய்தால் அதிக விளைச்சலை பெறலாம்.





Previous Post Next Post

نموذج الاتصال