அரப்பு மோர் கரைசல் :-
✅தமிழ்நாட்டில் அதிகமாகக் கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும் பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.
✅இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்துப் புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானையில் ஒரு வார காலத்துக்குப் புளிக்கவிட வேண்டும். ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாகத் தெளிக்கலாம்.
✅அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக இரண்டுவிதமான பலன்கள் கிடைக்கும். அதாவது, அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும். குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாகப் பாதுகாக்க முடியும்.
✅அரப்பு மோர் கரைசலைப் பூப்பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாகக் காணப்படும். நிறையப்பூக்கள் பூக்கும். இந்தக் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால், பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியைத் தந்து எதிர்ப்பார்க்கும் விளைச்சலும் கிடைக்கும்.